Official Announcement
ஊடகம் மற்றும் செய்தி வெளியீடு
August 11, 2026
மீகஹகிவுல புதிய பேருந்து நிலையம் பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது
அணுகு பாதை இன்மையால் சில காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த மீகஹகிவுல புதிய பஸ் நிலையம், அதன் புதிய அணுகு வீதி நிர்மாணிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கௌரவ. மீகஹகிவுல பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், அரச அதிகாரிகள், பிரதேசவாசிகள் என பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
Photo Gallery